கத்திய எடுத்தவங்க கையில் கலப்பை… ஆட்டையப் போட்டவர்கள் ஆடு மேய்ப்பாளர்கள்… மத்திய சிறைச்சாலையின் அபார திட்டம்…!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 6:03 pm
Quick Share

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள் இயற்கை விவசாயம், ஆடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி காலாபட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கைவினை பொருட்கள் செய்தல் பல்வேறு பயிற்சிகள் சிறைதுறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கைதிகள், சிறை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்வதற்கான நடவடிக்கையை ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அண்ணாச்சி, வாழை, மஞ்சள் சாகுபடியும் அதேபோல் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட பணியும் மேற்கொள்ள உள்ளது.

கைதிகளின் இந்த ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரும் 14ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். மேலும் சிறைச்சாலையில் உற்பத்தி செய்ய உள்ள பொருட்கள் வெளி சந்தையில் விற்பனைக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Views: - 838

0

0