தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையில் பதிவான பாதிப்பு.. இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 9:51 pm

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி, கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதாவது, 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 073ஆக அதிகரித்துள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,024 ஆக அதிகரித்துள்ளது. இன்று 169 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 087 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கும், கோவையில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?