பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் : பிளேடால் கிழித்ததில் மாணவன் படுகாயம்.. வேலூரில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
16 March 2022, 9:34 am
Quick Share

வேலூர் அருகே அரசு பள்ளி இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பிளேடால் கிழித்ததில் மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளான்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பூசாரி வலசை பகுதியை சேர்ந்த சுரேஷ் (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே ஊரை சேர்ந்த கமலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (14) படித்து வருகிறான். இதனிடையே நேற்று வகுப்பறையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் நேற்று காலையில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சுரேஷ் என்ற மாணவனை வழியில் தடுத்து நிறுத்தி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கிழித்துள்ளான்.

சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சுரேஷை மீட்டு பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 877

0

0