முடியப்போகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்….. ‘வெந்து தணிந்தது காடு ‘ இத்தோட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்சுக்கு வணக்கத்தை போடு’,

Author: kavin kumar
24 March 2022, 4:01 pm

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத் தொடர் ஆகும். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மக்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இது அண்ணன் தம்பி 4 பேரை பற்றிய கதை ஆகும் . இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின், சுஜிதா, ஆகியோர் நடித்துள்ளனர். மூர்த்தி (அண்ணன்) காதபத்திரத்தில் நடிகர் ஸ்டாலின் நடித்துள்ளார். தனலட்சுமி (அண்ணி ) கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்துள்ளார். அண்ணன் மூர்த்திக்கு மூன்று தம்பிகள் உள்ளனர் இவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் மூத்த மருமகள் தனலட்சுமி. இந்த குடும்பத்தில் தம்பிகளின் மனைவிகளாக வரும் மீனா, முல்லை ஆகியோரால் இவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பதுதான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதை ஆகும்.

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. இரவு 8 மணிக்கு ஒளிபரப்பபடும் இந்த தொடர் மக்களை வெகுவாக கர்வர்த்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஒரு சில நல்ல தொடர்களில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

மக்களின் வெற்றி தொடரான இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது முடிவிற்கு வரப்போகிறது. ஆம் தமிழில் உருவாக்கப்பட்ட இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் தமிழ் அல்லாது பிற மொழிகளிலும் ரீமேக் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தெலுங்கில் “வதிநம்மா ” என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது அந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதனை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் (வதிநம்மா) தொடரில் நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துகூறி வருகின்றனர். சிலர் இந்த தொடர் முடிந்து விட்டதே என்று வருத்தத்தில் உள்ளனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!