ராம்சரண் பிறந்தநாள் : படக்குழுவினருடன் கொண்டாட்டம்: நெகிழ்ச்சி பதிவிட்ட ஜூனியர் என்டிஆர். வைரல் வீடியோ..!

Author: Rajesh
27 March 2022, 4:59 pm

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாகுபலி படத்தை விட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து..ராம் சரண் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம்சரணின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். படக்குழுவினருக்கும், ராம்சரணுக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…