மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய மும்பை… மாஸ் காட்டிய ஜாஸ் : அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 9:22 pm
RR Won - Updatenews360
Quick Share

மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 5 , தேவ்தட் படிக்கல் 12 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

நிதானமாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 30 ரன் எடுத்தார். மத்தியில் இறங்கிய ஹெட்மியர் 14 பந்தில் 35 ரன்கள் குவித்தார். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி வந்த பட்லர் 66 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சர்கள் உடன் சதம் விளாசினார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணியில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டை பறித்தனர். 194 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷன் கிஷன் ,ரோஹித் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ரோகித் சர்மா 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய அன்மோல்பிரீத் சிங் வெறும் 5 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த திலக் வர்மா, இஷன் கிஷன் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையே சிறப்பாக உயர்த்தினார். இவர்கள் இருவரும் கூட்டணியில் 80 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினார். கிஷன் கிஷன் 54 , திலக் வர்மா 61 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மத்தியில் இறங்கிய டிம் டேவிட் 1, டேனியல் சாம்ஸ் டக் அவுட் ஆனார்கள். இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இறுதி இறுதி ஓவரில் கீரன் பொல்லார்ட் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ராஜஸ்தான் அணியில் யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டை பறித்தனர். ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடி இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

Views: - 1304

0

0