கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி கொள்ளை : ரூ.8.67 லட்சத்தை அபேஸ் செய்த வடமாநில கும்பல்..!!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 9:08 am

கோவை: கோவையில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டை திருடிய வடமாநில தொழிலாளர்கள் அதிலிருந்து ரூ.8.67 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது அனைவி யசோதா. கடந்த 4ம் தேதி யசோதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், யசோதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் யசோதாவிடம் இருந்த ஏ.டி.எம் கார்டை திருடிச்சென்று அதிலிருந்த ரூ.8.67 லட்சத்தை திருடிச்சென்றனர்.

இதையறிந்த கிருஷ்ணசாமி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் சோகை (55) மற்றும் ராஜ் பங்கிங் (31) ஆகிய இருவரை கைது செய்து கொள்ளையடித்த பணத்தை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

  • 'Neeya Nana' Gopinath's exit confirmed..? Official announcement! ‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!