ஒரு நிமிட கோபம் : சினிமா கெரியரையே இழக்கும் ஹாலிவுட் நடிகர்..!

Author: Rajesh
9 April 2022, 1:24 pm

உலக சினிமா ரசிர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் வில் ஸ்மித், தனது மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதியுடன் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அப்போது வில் ஸ்மித், தனது மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி நகைச்சுவையாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து பலரையும் அதிர்ச்சியடைச் செய்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் மன்னிப்பு கோரினார்.

இதனையடுத்து, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யும் குழு, வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து விவாதித்தது. இதன்பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் வில் ஸ்மித் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களைப் பாதுகாப்பதையும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டு, ஆஸ்கர் விழா மற்றும் அகாடாமியின் பிற நிகழ்வுகளில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு பத்து ஆண்டுகள் தடைவிதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலையில் அமைதியைக் காத்ததற்காக கிறிஸ் ராக்கிற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வில்ஸ்மித் நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிமிட உணர்ச்சி வசப்பட்ட கோபத்தினால் சினிமா கெரியரையே இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வில் ஸ்மித்..

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?