இப்படியும் ஒரு திருடனா…? குடியிருப்புகளில் செருப்புகளை திருடி குறைந்த விலைக்கு விற்பனை… திருடனை கைது செய்த போலீசார்…!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 9:59 am

அடுக்குமாடி குடியிருப்புகளில் விலை உயர்ந்த செருப்புகளை திருடி குறைந்த விலைக்கு விற்ற திருடனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரவள்ளூர்  பெரியார் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரபாபு (61). இவர் நேற்று காலை 10 மணி அளவில் இவர் தனது வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்த போது, அதில் அடையாளம் தெரியாத நபர் இவரது அடுக்குமாடி காம்பவுண்டுக்குள் உள்ளே நுழைந்து வீட்டின் வெளியே இருக்கும் காலணிகளை திருடி கொண்டிருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த பெரவள்ளூர் போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்த ராஜா (35), இவர் கோயம்பேடு  மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்ததும், எப்பொழுதெல்லாம் வேலை இல்லையோ, அப்போதெல்லாம் பல்வேறு இடங்களில் சென்று விலை உயர்ந்த செருப்புகளை திருடி அதனை பாரிமுனையில் குறைந்த விலைக்கு விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…