சொர்க்மே என்றாலும் திருநெல்வேலி போல ஆகுமா : இசைஞானியாக மாறிய தீயணைப்புத்துறை அதிகாரி.. வைரலாகும் பாடல் வரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 8:37 pm

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’என்ற தலைப்பில் தாமிரபரணி நதிக்கரையில் மரம் நடுதல், புத்தக கண்காட்சி என பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் மெகா துப்புரவு பணி இன்று தொடங்கியது. பாபநாசம் முதல் மருதூர் அணைக்கட்டு வரை சுமார் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த தூய்மை பணியை தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காரையாறு மலைப்பகுதியில் உள்ள சின்ன மைலாறு பகுதியில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் பாபநாசம் கொட்டாரம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்சியர் படகில் சென்று சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி படித்துறையில் கரையேறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ், பாளையங்கோட்டை தாமிரபரணி ஆற்றில், படகில் பயணித்தபடி “சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலி போல் ஆகுமா…” என்ற விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?