கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி : பல மணி நேரத்திற்கு பின் சடலம் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 10:45 am

கோவை : சூலூர் கல்குவாரி பகுதியில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 15). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஹரிஹரன் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சூலூரை அடுத்த பட்டணத்தில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது, அவர் நண்பர்களில் இருவர் நீச்சல் தெரியாததால் குளிக்கவில்லை.

ஆனால், மற்ற நான்கு கல்குவாரியில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

சிறிது நேரத்திலேயே, ஹரிஹரன் தண்ணீரில் தத்தளித்தப்படி மூழ்கியுள்ளார். அதனைப் பார்த்த, அவரதுநண்பர்கள், சக நண்பனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால், அதற்குள் சிறுவன்தண்ணீரில் முழுவதும் மூழ்கியுள்ளார். இதற்கிடையில், மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் விபத்து குறித்துசூலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.

இதையடுத்த, காலையில் மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!