1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில் எழுந்தருளிய முருகப்பெருமான்… அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!!

Author: Babu Lakshmanan
3 May 2022, 9:25 am

திருவள்ளூர் : 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும் மொட்டையடித்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

முன்னதாக, முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், பாலசுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயில் வாகனத்தில் அமர்ந்தவாறு முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?