அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து.? பிரபல இயக்குனரின் பதிவால் பரபரப்பு..!

Author: Rajesh
3 May 2022, 5:15 pm

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மஞ்சு வாரியர். 1998 ஆண்டு நடிகர் திலீப்பைத் திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது. இதையடுத்து மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்த அவர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ எனும் படம் வாயிலாக கம்பேக் கொடுத்தார்.

சினிமாவில் மஞ்சு வாரியரின் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் வாயிலாக தமிழிலும் அறிமுகமானார். இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் பற்றி தகவல் ஒன்று சினிமா உலகில் தற்போது வலம்வந்துகொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக்கில் இது தொடர்பாகத் தெரிவித்துள்ள பிரபல மலையாள இயக்குநரான சனல்குமார் சசிதரன், நடிகை மஞ்சு வாரியர், சிலரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இது பற்றி நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பல நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை. அவரது மேனேஜர்கள் பெயரையும், அவர் கடத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்தேன். ஆனால் தற்போது வரை ரெஸ்பான்ஸ் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். இயக்குனரின் இந்த பதிவு மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?