பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: பல முன்னேற்றங்களை அடைய ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி..!!

Author: Rajesh
5 May 2022, 10:05 am

சென்னை: இன்று +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 8,37,317 மாணவசெல்வங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று பலமுன்னேற்றங்களை நீங்கள் அடைவதற்கு அச்சாணியாக இருக்கும் இந்த பொதுத்தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்