கோவை மாநகராட்சியின் அலட்சியமா? பழிவாங்கும் நடவடிக்கையா?: முன்னாள் அமைச்சர் வீட்டின் அருகில் மூடப்படாமல் இருக்கும் பாதாள சாக்கடை பள்ளம்…மக்கள் அதிருப்தி..!!

Author: Rajesh
9 May 2022, 6:43 pm
Quick Share

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு இருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் சாலையில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக பெரிய அளவில் குழியும் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவை மாவட்டத்தில் எந்த பணிகளையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டிவருவது. மாநகராட்சியின் இந்த அலட்சியத்தால் கோவை சுகுனாபுரம் பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.

இந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு இருப்பதால் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரும் வீனாகி வருகிறது. இதுவரை கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Views: - 574

0

0