வீட்டுமனை பட்டா கோரி மனு…செவி சாய்க்காத அரசு அதிகாரிகள்: அரூரில் கண்ணீர்மல்க மாற்றுத்திறனாளி உண்ணாவிரத போராட்டம்..!!

Author: Rajesh
9 May 2022, 5:37 pm
Quick Share

தருமபுரி: அரூர் கச்சேரி மேட்டில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு(52). இவர் இரண்டு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து வருகிறார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பல முறை கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனடிப்படையில் அரூர் அடுத்த கீரைப்பட்டி இந்திரா நகரில் இருளர் காலனி பகுதியில் இவருக்கு பட்டா வழங்கப்பட்டது.

மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பகுதியில் குடிபெயர கூடாது என தெரிவித்து கிராம மக்களே அந்த நிலத்தை அபகரித்து கோவில் கட்டியதால் வேறு இடத்தை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பின்பு அரூர் அம்பேத்கர் நகர் பகுதியிலேயே இவருக்கு இரண்டு சென்ட் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்து அடித்தளம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ஒதுக்கப்பட்ட இடமானது அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடம் என்பதால் அரூர் அடுத்த செக்காம்பட்டி கிராமத்தில் இவருக்கு வேறுரொரு இடமும் வழங்கப்பட்டது. அதற்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என தெரிவித்து தனக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் இன்று அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வருவாய் துறையினரிடம் கண்ணீர் மழ்க பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 547

0

0