ஓடும் பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்.. தாய் கண்முன்னே நடந்த பரிதாபம் : திக் திக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
26 ஏப்ரல் 2024, 2:51 மணி
Suicide
Quick Share

ஓடும் பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்.. தாய் கண்முன்னே நடந்த பரிதாபம் : திக் திக் VIDEO!

கோவை சாய்பாபா காலனி கருப்புசாமி வீதி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது மகன் ஆனந்த். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் இருந்துள்ளது.

இதை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு அவரது தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா ஆகியோர் ஆனந்தை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்.. சைகையில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!

பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஆனந்த் அவ்வழியே துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நகரப் பேருந்து முன்பாக பாய்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பாக கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் சம்பவம் குறித்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 193

    0

    0