கணித பாடத்தில் தோல்வி… மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

Author: Babu Lakshmanan
6 May 2024, 6:56 pm
Quick Share

பிளஸ் 2 கணித பாடப் பிரிவில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் அபிநயா (வயது 17). இவர் பெரியாங்குப்பத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

மேலும் படிக்க: தந்தை சுமை வண்டி இழுக்கும் தொழிலாளி… தாய் லோடு வண்டி ஓட்டுநர் : முதல் குரூப்பில் 560 மதிப்பெண் பெற்று அசத்திய கோவை மாணவி!!

இந்நிலையில், இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி, கணித பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது பெற்றோர்கள் வயலுக்கு சென்று முந்திரி கொட்டை பறிப்பதற்காக சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த அபிநயா, தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் வயல்வெளி வேலையை முடித்துவிட்டு பெற்றோர்கள், வீட்டிற்கு வந்தபோது தூக்கில் பிணமாக மகள் தொங்குவதைக் கண்டு கதறி அழுதுள்ளனர்.

இதுகுறித்து ஊமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவி அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 187

0

0

Leave a Reply