ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 4:27 pm
Ptrol
Quick Share

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் வழக்கறிஞருக்கு பயின்றுவிட்டு கோவில்பட்டியில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் ‌பயிற்சி பெற்று வருகிறார்.

இவர் பகுதியில் உள்ள 16 வயது சிறுவனை பாம்பு கார்த்திக் என்ற கார்த்திக் ராஜா ரேஷன் அரிசி வாங்கி தர வலியுறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு சிறுவன் மறுக்கவே அவரை பாம்பு கார்த்திக் மட்டும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை மாரிச்செல்வம் தட்டிக் கேட்டுள்ளார். மேலும் பாம்பு கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை விருதுநகர் பகுதியில் வைத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

போலீசாருக்கு மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்ததாக கூறி கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் பாம்பு கார்த்திக் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் மாரிசெல்வம் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியது மட்டுமின்றி , மாரிச்செல்வம் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மற்றும் ஊத்துப்பட்டி அருகே செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரி செல்வத்தின் வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து கொளுத்தியது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பாம்பு கார்த்திக் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் படிக்க: பூத் ஏஜெண்டா வேலை செய்ததற்கு பணம் எங்கே? BJP பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர்!

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,அரசியல் கட்சியினர் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மாதவா ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குப்பனாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், ஓணமாக்குளத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் , கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த சண்முகராஜ், கயத்தாறை சேர்ந்த ராஜா என்ற சண்முகராஜா , அதே பகுதி சேர்ந்த சகோதரர்கள் முத்துகிருஷ்ணன், நரசிம்மன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாம்பு கார்த்திக் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 419

    0

    0