மழலை மொழியில் வகுப்பறை அவலம் குறித்து வேதனை… வைரலான சிறுமியின் பெற்றோருக்கு சிக்கல்… மிரட்டும் கவுன்சிலர்!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 4:43 pm
Quick Share

சென்னையில் தேர்தலுக்கு பிறகு வகுப்பறையின் அவலத்தை பள்ளி சிறுமி மழலை குரலில் அம்பலப்படுத்திய நிலையில், அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக சென்னை முகப்பேர், வேணுகோபால் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியும் வாக்குச்சாவடியாக செயல்பட்டு வந்தது. தேர்தல் முடிந்த பிறகு, அங்கு உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே போடப்பட்டிருந்தது.

மேலும், தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள் பள்ளி சுவர்களில் அப்படியே விடப்பட்டு இருந்தன. மேலும், போஸ்டர்களினால் சுவர்களில் இருந்து பெயிண்ட் பெயர்ந்த நிலையில் இருந்தது. அதுமட்டுமில்லாமல், பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த அலமாரியும் உடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், ‘எங்கள் பள்ளியை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? எங்கள் பள்ளியை நாங்களே ஒழுங்காக வைத்திருக்கிறோம். படித்த உங்களுக்கு, வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா’ என்று மழலை மொழியில் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும் படிக்க: அரசு அதிகாரிகளுக்கு எதிராக திமுகவினரின் தொடர் அராஜகம்… CM ஸ்டாலின் தான் காரணம் ; அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்த வீடியோ வைரலான நிலையில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், அம்பத்தூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், வகுப்பறையின் அவலம் குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமியின் பெற்றோரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரும் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பேசிய சிறுமியின் தாய் ரம்யா, “என் மகள் பயிலும் பள்ளியின் அலமாறி உடைந்திருப்பதை கண்டு மகள் மிகவும் வேதனைப்பட்டாள். எனவே, அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டோம். ஆனால், அரசுக்கு எதிராக செயல்படுகிறீர்களா..? என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரியும், கவுன்சிலரும் எங்களை கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், அனுமதியில்லாமல் பெற்றோரை பள்ளியின் உள் அனுமதித்தது ஏன்..? என்று அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள்,” எனக் கூறினார்.

மேலும், இனி பெற்றோரை அனுமதியின்றி உள்ளே விடக் கூடாது என்று தீர்மானம் போட்டதாகவும்,

Views: - 96

0

0

Leave a Reply