நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 2:18 pm
Train
Quick Share

நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சேர்ந்தமரம் என்ற பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாண்டிச்சேரி சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு செல்ல விழுப்புரத்தில் பாண்டியன் விரைவு ரயிலில் ஏறி வந்து கொண்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் பதறிய நண்பர்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் அவருடைய மொபைல் எண் மூலமாக அவர் கீழே விழுந்த இடம் லால்குடி ரயில் நிலையம் அருகில் என கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு மூலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ரஷீத் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: செந்தில்பாலாஜி விடுவிக்க வாய்ப்பு? அடுத்த முறை நிச்சயம்? நீதிமன்றம் கொடுத்த சிக்னல்!!

இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 227

0

0