தடையை மீறி SMOKE BISCUIT விற்பனை… திபுதிபுவென வந்த அதிகாரிகள்… அதிர்ந்து போன உரிமையாளர்!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 10:07 am

மதுரை தெப்பக்குளம் பகுதியில் Smoke biscuit திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மதியம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கேரள அரசு… அமைச்சரின் அலட்சியத்தால் பறிபோகும் நீர் ஆதாரம்…!!

அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் (Smoke biscuit) கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்களை அகற்றப்பட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!