பொறுப்பின்றி ஊர் சுற்றித்திரிந்த மகன்…கண்டிக்க முடியாத விரக்தியில் தாய்-தந்தை தற்கொலை: மதுரையில் சோகம்..!!

Author: Rajesh
19 May 2022, 10:26 am

மதுரை: அருள்தாஸ் புரத்தில் பொறுப்பற்று ஊர் சுற்றிய மகனின் செயலால் மன வேதனையுற்ற தாய், தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருள்தாஸ் புரத்தை சேர்ந்த கந்தசாமி – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மற்றொரு மகனான அழகர்சாமி (எ) குணா என்பவர் பெத்தானியாபுரம் பகுதியில் தனியே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அழகர்சாமி மதுப்பழக்கத்திற்கு ஆளாகி பொறுப்பற்ற முறையில் இருப்பதாக கந்தசாமியும் ராஜேஸ்வரியும் பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மன வேதனை அடைந்த தம்பதியினர் மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அமர்ந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் நீண்ட நேரமாக அங்கேயே இருந்து பின்னர் மயங்கி விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பின்னர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையில் இருந்து வந்தவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறுப்பற்ற மகனை கண்டிக்க முடியாமல் மனவேதனையில் பெற்றோர் கோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…