ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு… நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சோனியா…!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 8:42 am

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ராஜிவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். அவரது மறைவை தொடர்ந்து, டெல்லியில் வீர் பூமி என்ற பெயரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினத்தை காங்கிரஸ் கட்சியினர் இன்று அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ராஜிவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, வீர் பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவரோடு, அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்பட பலர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?