கொஞ்சம் அசந்தாலும் நிலத்தை ஆட்டையப் போட்டுறுவாங்க… திமுக குறித்து இபிஎஸ் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
6 June 2022, 8:16 pm

சேலம் : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் நிலத்தை பறித்து விடுவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த அதிமுக ஆட்சியின் போது நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, எச்சரிக்கை பலகைகளை வைத்தோம். கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து ‛நில அபகரிப்பு’-ம் வந்து விடுகிறது. எங்காவது ஏமாந்தவர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தை ஆட்டையை போட்டுவிடுவார்கள். அதிமுக – பா.ஜ.க உறவில் எந்த விரிசலும் இல்லை.

அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளால் கொள்ளை புறம் வழியாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ‛செவிடன் காதில் ஊதிய சங்கு’ போலதான் இந்த அரசு செயல்படுகிறது, எனக் கூறினார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!