எங்களுக்கும் உணர்ச்சி இருக்கு : எல்லை மீறும் பயில்வான் ரங்கநாதன் மீது நடிகை ஆல்யா மானசா பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 12:02 pm

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு என்று சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.

நவீன உலகில் பல் மருத்துவத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் கையாளப்பட்ட போதும், அவை ஏதோ வகையில் கஷ்டமான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தைகளிடைய பல் மருத்துவம் என்றாலே இன்றளவும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், தங்களது குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பற்களால் ஏற்படும் பிரச்சினைகளில் அவர்களது எதிர்காலம் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் கவலை கொண்டு வருகின்றனர்.

இதற்கு மாற்று தீர்வாக டாக்டர் ஷிஃபா குழந்தைகளுக்கான பல் மருத்துவத்தில் வாய், ஆரோக்கியம், தூக்கப் பிரச்சினைகள் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார். மேலும், பல் பராமரிப்பு தொடர்பான பல மருத்துவ நெறிமுறைகள் உருவாக்கியுள்ளார். இதற்காக “தடுப்பு குழந்தை பல் மருத்துவம்” என்ற புதிய யுக்தியை கையாண்டு வருகிறார்.

இதன் மூலம் பற்களில் ஒழுங்கற்ற தன்மை, நாக்கு உந்துதல், முகம் மற்றும் பேச்சு தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீர்க்க உதவுகிறது.

இதற்காக “லிட்டில் வீ”என்ற பெயரில் பல் மருத்துவமனை தமிழகத்தில் சென்னை, கோவை மாநகரங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர்- கோவை சாலையில் இந்த மருத்துவமனையின் கிளை டாக்டர் ஷிஃபா தலைமையில் இன்று துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்போது இந்த மருத்துவ முறை குறித்து டாக்டர் ஷிஃபா செய்திகளிடம் விளக்கி கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடிகை ஆல்யா மானசா எதிர்காலத்தில் பல் சிகிச்சை முறையில் “தடுப்பு குழந்தை பல் மருத்துவம்” சிறப்பான நிலையை எட்டும் என்றார்.

மேலும் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு என்று தெரிவித்தார். நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது வருத்தமளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…