“தலைவர் 169” ரஜினி எடுத்த அதிரடி முடிவு.. வெற்றி இயக்குனருடன் மீண்டும் இணையவுள்ளாரா ரஜினிகாந்த்?

Author: Rajesh
7 June 2022, 1:00 pm
Quick Share

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின் தான் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியானது.

விஜய் நடிப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்கப் போவதில்லை என்ற செய்திகள் இணையத்தில் உலாவியது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 படத்தின் போட்டோவை வைத்த நெல்சன் இயக்கப்போவது உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் தலைவர் 169 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்தாக தகவல்கள் வெளிவந்தன. இயக்குனர் மற்றும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் இப்படத்தில் இணைந்து இருப்பதாக கூறப்பட்டது. ரஜினியின் படையப்பா, முத்து, லிங்கா படங்களை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான ‘AGS Cinemas’ தனது அதிகார ட்டுவிட்டர் பக்கத்தில், தலைவர் 169 படத்தினை தயாரிக்கப் போவதாகவும், இந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என்றும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பதிவால் ரஜினியின் தலைவர் 169 படத்தினை யார் இயக்குவார்? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Views: - 394

0

0