சொத்துவரி, குடிநீர் வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை… வரி வசூலில் பம்பரம் போல் செயல்படும் மாநகராட்சி : அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 6:31 pm

கரூர் : சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை வசூலில் பம்பரம் போல் செயல்பட்டு வரும் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், குடிநீர் கட்டணம், சொத்து வரி, மாநகராட்சிக்குட்பட்ட கடை வாடகை வசூல் ஆகியவற்றினை வசூலிக்க, துண்டு பிரசூரங்கள், ஒலி பெருக்கி மூலம் வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் உத்திரவின்படி குழு அமைக்கப்பட்டு, ஒரு லட்சத்திற்கு மேல் வரி செலுத்தாத கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் காம்பளக்ஸ்களுக்கு கரூர் மாநகராட்சி வருவாய் அலுவலர் பாஸ்கர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் குழந்தைவேலு, ரகுபதி மற்றும் நகரமைப்பு அலுவலர் சிவக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்டோர் கொண்ட குழுக்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேல், வரி செலுத்தாத இடங்களுக்கு நேரிடையாக சென்று வரி வசூல் செய்து வருகின்றனர்.

வரும் 30 ம் தேதிக்குள் அனைத்து வரிகளையும் செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கும் படியும், வரி கட்டாத நிலையில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அறிவிப்பு பலகை வைத்தல் ஆகியவைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மாலை வரை வருவாய்த்துறை அதிகாரிகள் குழு தீவிர வரி வசூல் செய்யும் பொருட்டு அதிரடியாக களத்தில் நேரிடையாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!