இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள்.. இதுதான் சனாதனம் : வேலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 1:31 pm

வேலூர் : நதிகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும். அப்போதுதான் அவைகளை பாதுகாக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளர்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று நடைபெற்றது.

இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

2016 இல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின் சாரம் தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள் .

வரும் 2025 க்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 2021 செப்டம்பர் மாதத்திலே அந்த இலக்கை அடைந்து விட்டோம். இந்தியா 2030 க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள் இது தான் சனாதனம்
பூமி ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது .

அடுத்த 30 – 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்சனை ஏற்படுகிறது. அதனை தடுக்க நாம் முன் வரவேண்டும். என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன்

ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளம், குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செய்யல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட்க்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள், 2047 ல் ஏரியில் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும், அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பேசினார்.

இவ்விழாவில்,அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தின் தலைவர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,
துணைத்தலைவர் சாமி ராமாநந்தா, பொதுச்செயலாளர் ஆத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்,மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தியாசிகள் பங்கேற்றனர்.
உள்பட பலர் பங்கேற்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!