பஞ்சாப் வரலாற்றில் புதியதொரு முன்மாதிரி…300 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் : சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர் பகவத்மான்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 9:01 pm

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி க்கட்சியின் சார்பில் மாநில முதல்வராக பகவத்ந்மான் செயல்பட்டு வருகிறார். இம்மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றிற்கு 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச மின்சாரம் வழங்குவற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது: முந்தைய அரசுகள் தேர்தல்களின் போது அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்து விடும். ஆனால் எங்கள் அரசு பஞ்சாப் வரலாற்றில் புதியதொரு முன் மாதிரியை அமைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

நாட்டிலேயே டில்லி யூனியன் பிரதேசத்தை தொடர்ந்து மாநில அளவில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி இலவச மின்சாரத்தை வழங்குகிறது என அக்கட்யின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா குறிப்பிட்டுள்ளார்.

மாநில மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் பட்ஜெட்டில் ரூ.1,800 கோடி வரை கூடுதல் சுமை உருவாகும் என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?