குடியிருப்புகளுக்குள் வராம பாத்துக்கோங்க… எல்லைப் பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்… வனத்துறைக்கு கோவை மக்கள் கோரிக்கை…!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 10:34 am

மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லைப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரின் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. மலையின் கீழ் பகுதியில் யானை நடமாடி வருகிறது. இதனால், யானை எப்பொழுது வேண்டுமானாலும், ஊர்க்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வனத்துறையினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் நீண்ட நாட்கள் கழித்து யானை மலையில் நடமாடுவதால் பொதுமக்கள் யானையை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?