திமுகவினருக்கு தேச ஒற்றுமை மீது நம்பிக்கை இல்ல… தேசியக்கொடியை DP-யாக வைக்கக் கூட தயக்கம் : வானதி சீனிவாசன்..!!

Author: Babu Lakshmanan
6 August 2022, 6:07 pm

சென்னை : திமுகவினருக்கு தேசிய கொடியின் மீதோ, தேச ஒற்றுமையின் மீதோ முழுமையான நம்பிக்கை இல்லை என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏந்திய மகளிர் வாகன பேரணியை பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். இந்த பேரணி சென்னையில் தொடங்கும் இந்த பேரணி திருவிடந்தை வரை நடைபெற்றது.

முன்னதாக, பேரணியை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- இந்திய நாட்டினுடைய தேசிய கொடி என்பது அனைவருக்கும் சொந்தமானது. தமிழகத்தில் தேசியக் கொடியை மாநிலங்களில் ஏற்றுவதற்கு நாங்கள் உரிமையைப் பெற்றுத் தந்தோம் என்று திமுக கூறினால், ரொம்ப பெருமையாக அவர்களுடைய டிபியாக வைக்கலாம்.

அதில், திமுகவினருக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்று சொன்னால், அடிப்படையிலேயே அவர்களுக்கு தேசியக் கொடியின் மீதோ, தேச ஒற்றுமையின் மீதோ ஒரு முழுமையான நம்பிக்கை இல்லாததை பல சமயங்களில் பார்த்திருக்கிறோம்.

Mla Vanathi - Updatenews360

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் இவ்வளவு பங்கு வகித்திருப்பது பெருமைக்குரியது. நாங்கள் இதனை முன்னெடுக்கிறோம் என்றுக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வந்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ பிரதமர் சொல்லிவிட்டாரே என்று, நாடு முழுவதும் சொல்லிவிட்டனரே வேறு வழி இல்லாமல் செய்துவிடுவோம் என்று, பெயரளவுக்கு மாவட்ட ஆட்சியர்களிடம் கொடி கொடுப்பது என்றால் கொடுங்கள் என கூறியுள்ளார். ஒரு தீவிரமான முன்னெடுப்பினை எங்களால் பார்க்கமுடியவில்லை, என்று அவர் கூறினார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!