இயற்கை உபாதை கழிக்க சென்ற வனச்சரகரை தாக்கிய காட்டு யானை : படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 10:43 am

கோவை சிறுவாணி மலை அடிவாரம் சாடிவயல் அடுத்த சிங்கம்பதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இதேபோல் வனப் பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் மனித – வனவிலங்கு மோதல்கள் ஏற்படுகிறது.

இந்தநிலையில் சிங்கம்பதி கிராமத்தில் வசிப்பவர் முருகன். இவர் தமிழக சுற்றுலா துறையில் வனச்சரகராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காலை தனது வீட்டில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த காட்டு யானை திடீரென எதிர்பாராத விதமாக முருகனை தாக்கியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அப்பகுதி மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். பின்னர் காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து சென்றது.

பின்னர் படுகாயம் அடைந்த முருகனை உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!