‘நாத்திக அரசே பதவி விலகு’ : தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்… இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 5:34 pm

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்

இந்து கலை இலக்கிய முன்னணி மாநில செயலாளர் கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் மாநில தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானவரை காவல் துறையினர் கைது செய்தனர் .

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், கனல் கண்ணனின் கருத்தை இந்து முன்னணி வரவேற்பதாகவும் அவர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால் இந்து முன்னணி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!