நீரிழிவு நோயை அடியோடு விரட்டி அடிக்கும் பூண்டு!!!

Author: Hemalatha Ramkumar
28 August 2022, 10:19 am

மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த சீசனில் பலவிதமான வைரஸ் காய்ச்சல்கள், வைரஸால் பல நோய்கள் வர ஆரம்பித்துவிட்டன. இந்த விஷயம் அனைவரையும் கலங்க வைக்கலாம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு மருந்து பல பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. அதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்

1. சளி பிரச்சினை: சளி இருமல் பொதுவான தொல்லை. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் குளிர்காலத்தில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். உங்களுக்கு சளி இருக்கும் போது பூண்டு டீயை உட்கொள்ளலாம். வெதுவெதுப்பான நீரில் பூண்டு பற்களை சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கவும். சுவைக்காக, தேநீரில் தேன் மற்றும் இஞ்சியையும் போடலாம்.

2. எடையைக் கட்டுப்படுத்துகிறது: அதிகரித்து வரும் எடை மற்றும் தொப்பை இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் தொந்தரவு செய்கிறது. பூண்டு சேர்த்து உணவு சாப்பிடுவதன் மூலம் கூடுதல் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

3. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது: இரத்த அழுத்தப் பிரச்சனை இன்று எல்லா வீடுகளிலும் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் பூண்டு செயல்படுகிறது. நீங்கள் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக பூண்டு சாப்பிட வேண்டும்.

4. புற்றுநோய் தடுப்பு: பூண்டை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.

5. நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும்: நீரிழிவு நோயாளிகள் தங்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பூண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். பூண்டு தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பூண்டை சாப்பிடுங்கள்.

  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!