சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 12:05 pm

விருதுநகர் : ராஜபாளையம் அருகே விநாயகர் சிலை கொண்டு சென்ற சப்பரத்தின் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் அந்த பகுதி மக்கள் சார்பாக சப்பரத்தில் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. நாளை அந்த பகுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் மரத்தில் மோதாமல் இருப்பதற்காக சப்பரத்தை மற்றொரு புறம் கொண்டு சென்ற பொழுது டிரான்ஸ்பாமிலிருந்து வரும் மின்சார வயரில் வண்டியில் இருந்த டிஜிட்டல் பேனர் கம்பி தட்டியதில் முனீஸ்வரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் செல்வ கிருஷ்ணன், செல்லப்பாண்டி இருவர் படுகாயம் அடைந்து சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…