முத்தம் கொடுத்த நபரின் உதட்டை கவ்விய நாகப் பாம்பு : நெஞ்சை பதற வைக்கும் ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 1:49 pm

பெங்களூரு கர்நாடக மாநிலம் ஷிவமொகாவின் அருகே குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. உடனே பாம்பு பிடிக்கும் நபருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் வருவதற்குள் பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. பின்னர், ஒருவழியாக பாம்பை பிடித்துள்ளார். இதனையடுத்து, பாம்பை பிடித்து விட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார்.

https://vimeo.com/755877748

அப்போது, ஆக்ரோஷமாக இருந்த அந்த பாம்பு அவரது உதட்டை கொத்தியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!