நைட் டைம்ல தயிர் சாப்பிட்டா என்ன ஆகும்…???

Author: Hemalatha Ramkumar
13 October 2022, 9:56 am

தயிர் நல்ல பாக்டீரியாக்களின் சிறந்த மூலமாகும் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நல்லது. ஆனால் பெரும்பாலான உணவுகளைப் போலவே, தயிர் சாப்பிடுவதற்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது பொதுவாகக் கேட்கப்படும் விதிகளில் ஒன்றாகும். இது உண்மையா இல்லையா என்பதையும் தயிர் சாப்பிடுவதற்கான சில விதிகள் குறித்தும் இப்போது பார்க்கலாம்.

– இரவில் தயிர் சாப்பிட வேண்டாம், குறிப்பாக உங்களுக்கு இருமல் மற்றும் சளி இருந்தால் தயிர் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். ஆயுர்வேதம் இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறுகிறது. ஏனெனில் இது சளி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஒரு வேலை உங்களால் தயிர் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் அதற்கு பதிலாக மோர் சாப்பிடலாம்.

– மற்றப்படி நீங்கள் பகல் நேரத்தில் தயிர் சாப்பிட்டால், சர்க்கரை இல்லாமல் சாப்பிடுங்கள். ஆனால் நீங்கள் இரவில் தயிர் சாப்பிடுகிறீர்கள் என்றால், சர்க்கரை அல்லது சிறிது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுங்கள். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பை அமைதிப்படுத்தும்.

– சூடான தயிர் சாப்பிட வேண்டாம்

உங்களுக்கு விருப்பமான தயிர் சாப்பிட ஒரு சில வழிகள் இதோ:-

தயிர் சாதம்: இது வயிற்றுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரையுடன் தயிர்: உங்கள் தயிரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

மோர்/லஸ்ஸி: கடைகளில் விற்கப்படும் காற்று அடைக்கப்பட்ட பானங்களுக்கு பதிலாக மோர் அல்லது லஸ்ஸி குடிக்கலாம்.

பச்சடி: வெங்காயம், வெள்ளரி, கொத்தமல்லி போன்றவற்றை தயிரில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். பொதுவாக பிரியாணி உடன் சாப்பிட இது அட்டகாசமாக இருக்கும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!