90’s கிட்ஸ்க்கு பிரபலமான கார்ட்டூன் சேனல் மூடப்படுகிறது? ஒளிபரப்பு சேவை திடீர் நிறுத்தம் : உண்மை நிலவரம் இதோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 2:12 pm

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சேனல்தான் கார்ட்டூன் நெட்வொர்க். TOM and Jerry, Scooby doo போன்ற கார்டூன்கள் இதில் பேமஸ். குழந்தைகள் அதிகம் விரும்பும் சேனல்களாக கார்ட்டூன் நெட்வொர்க் வலம் வந்தது.

Popeye நிகழ்ச்சியும், இந்த சேனலில் ஒளிபரப்பட்டு வந்தது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இந்த சேனலை கண்டுகளித்தனர். ஆனால் நாளடைவில் ஏரளாமான கார்ட்டூன் சேனல்கள் வந்தன.

சேனல்கள் பெருகினாலும், கார்ட்டூன் நெட்வொர்க் ரசிகர்கள் இன்னும் இந்த சேனலை பார்த்துக்கொண்டு தான் வருகின்றனர். இருந்தபோதும் கார்ட்டூன் நெட்ஒர்க் சேனல் நிறுத்தப்பட இருக்கிறது என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருவது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று அந்நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், எங்களுக்கு 30 வயது தான் ஆகிறது, இன்னும் சாகவில்லை, நாங்கள் எங்கும் செல்லவில்லை. எப்போதும் உங்களுக்கு பிடித்த மற்றும் புதுமையான கார்ட்டூன்களுக்கு வீடாக நாங்கள் இருப்போம். இன்னும் பல விரைவில் வருகிறது என கார்ட்டூன் நெட்ஒர்க் சேனல் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ட்விட்டை பார்த்த நெட்டிசன்கள், அப்பாடா எனக்கு அப்பவே தெரியும் இது வதந்தியாத்தான் இருக்கும் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…