18 மாதங்களுக்கு மேல் உள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டும் : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 6:31 pm

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் உதயகுமார், பொது செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மரணமடைந்த சங்க உறுப்பினர்கள் மாரப்பன், முருகேசன், மயில்வாணன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலமாக மயில்வாணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் கடநத் 18 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளுக்கான பில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி கமிஷ்னரை சந்தித்து வலியுறுத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கடந்த 6 ஆண்டு காலத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள 5% பில்களில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷ்னரை சந்தித்து வலியுறுத்த இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?