ரஜினி வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்கள்.. போயஸ்கார்டனில் நடந்தது என்ன தெரியுமா..?

Author: Vignesh
24 October 2022, 10:38 am

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறினார்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்தி சந்தித்தார்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?