மெய்மறந்து கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த பெண்… தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!!

Author: Babu Lakshmanan
1 November 2022, 9:57 am

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்த சஷ்டி விழா முக்கிய நிகழ்வான சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்வு அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், பழனிஆண்டவர் நகரை சேர்ந்தவர் வீரமணி. இவர் பழனியில் தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க தாலிச் சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றனர்.

இதுகுறித்து பழனி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் துறையினர் கோவிலில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தங்க சங்கிலியை பறித்த சென்ற நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கோவில் திருக்கல்யாண நிகழ்வில் தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!