டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து- அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா..!

Author: Vignesh
6 November 2022, 11:28 am

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

இப்போட்டியில் நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்த 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்தின் சிறப்பான பந்து வீச்சால் ரன் எடுக்க முடியாமலும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தும் தடுமாறியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது.

cricket - updatenews360

இதன் மூலம், நெதர்லாந்து தென் ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!