வானில் பறந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு : துரிதமாக யோசித்த விமானி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 7:17 pm

இந்திய விமான படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் மராட்டியத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

மராட்டியத்தின் புனே நகரில் இந்திய விமான படையை சேர்ந்த சேடக் ரக ஹெலிகாப்டர் ஒன்று இன்று புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, புனே மாவட்டத்தில் உள்ள பராமதி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
இதனை விமான படையின் மக்கள் தொடர்பு அதிகாரியான விங் கமாண்டர் ஆஷிஷ் மோகே உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில் விமானி பாதுகாப்புடன் உள்ளார். இதனையடுத்து, சம்பவ பகுதியில் இருந்து ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?