‘தொப்பிய கொஞ்சம் தூக்கு’… போட்டியின் நடுவே லீச்சை வைத்து ரூட் செய்த காரியம் ; விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 4:26 pm

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் ரூட் செய்த செயல் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் பேட்டிங், வரலாற்று சாதனை படைக்கும் வகையில் இருந்தது.

முதல் நாளிலேயே க்ரவுலி (122), டக்கெட் (107), போப் (108), ப்ரூக்ஸ் (153) ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதனால், அந்த அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, 2வது நாளில் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள், இமாம் உல் அக், அப்துல்லா சஃபிக் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 187 ரன்களை சேர்த்திருந்தது.

இந்த நிலையில், 3வது ஆட்டம் தொடங்கியதும் அப்துல்லா சஃபிக் (114), இமாம் உல் அக் (121) சதமடித்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, அசார் அலி (27), சவுத் ஷகில் (37) ஆட்டமிழந்தாலும், கேப்டன் பாபர் ஆசம் சதமடித்து நிதானமாக ஆடி வருகிறார்.

பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் ஸ்பின்னர்களையே அதிகம் பயன்படுத்தி வருகிறார். தற்போது, 118 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வெறும் 38 ஓவர்களையே வீசியுள்ளனர். எஞ்சிய ஓவர்களை ஸ்பின்னர்களே வீசி வருகின்றனர்.

அந்த வகையில், ஸ்பின்னர்களுக்கு பந்து நன்கு திரும்புவதற்காக, பந்தை ஷைனிங் செய்வது வழக்கம். பொதுவாக, தொடை மற்று பின்பகுதி அல்லது கால் பகுதியில் பந்தை தேய்த்து ஷைனிங் செய்வார்கள். ஒருசிலர் நெற்றியில் இருக்கும் வியர்வையை தொட்டு பந்தில் தேய்த்து ஷைனிங் செய்வதையும் நாம் மைதானங்களில் பார்ப்பதுண்டு.

ஆனால், இங்கிலாந்து அணியின் வீரர் ரூட், சுழற்பந்து வீச்சாளர் லீச்சின் தலையில் பந்தை வைத்து தேய்த்து ஷைனிங் செய்த நிகழ்வு அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. தலையில் முடி அடர்த்தி குறைந்த லீச்சின் தொப்பியை தூக்கி, தலைப்பகுதியில் பந்தை தேய்த்து ஷைனிங் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்