அப்போ உத்தவ் தாக்கரே.. இப்போ உதயநிதி : தமிழகத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 9:14 pm

கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். முதலில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், கேஸ் 99.3 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் கேஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது தெரிய வருகிறது. இதன் விலையை குறைக்க வேண்டும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். புதிதாக எதையும் சொல்லவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முறையாக நிறைவேற்றி உள்ளதா? என்பதை பொதுமக்களாகிய நீங்களே பாருங்கள்.

பொய் சொல்லுவதில் ஒரு போட்டி வைத்தால் தமிழக அமைச்சர்கள், திமுக தான் வெற்றி பெறுவர். மத்திய அரசு மின் கட்டணத்தை எந்த இடத்திலும் ஏற்ற சொல்லவில்லை. வேண்டுமென்றால் வெள்ளை பேப்பரை வெளியிடுங்கள். மக்கள் கூட்டி கழித்து பார்த்தால் உண்மை தெரிந்து விடும் எனக் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், ரூப் டாப் சோலாருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு இந்த ஆட்சியில் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அமைச்சரின் கோவை வருகையை பற்றி நான் என்ன சொல்வது? பொய்யை சொல்லுவதற்கே கோவை வருவதாக தோன்றுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அமைச்சரான போது என்ன ஆனது என்பதை உதயநிதி அமைச்சரானதை வைத்து பார்ப்போம் எனக் கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கூட்டம் கூடுவது வேடிக்கை பார்க்க மட்டுமே.

அதுவொரு என்டர்டெயின்மென்ட். நடைபயணத்தின் முடிவை நாங்களும் பார்த்து தான் வருகிறோம். அவர்கள் அனைவரும் இந்தியாவை பிரிக்க கூடியவர்களை வைத்து சுற்றி வருவதாக விமர்சித்தார்.

மேலும் பேசுகையில், தமிழக அரசு பனை வெல்ல பயன்பாட்டை தொடங்கி வைக்கிறோம் என்று கூறியது. எல்லாம் தேர்தல் அறிக்கையில் சொன்னது தான். அதை இந்த பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே.

அதுமட்டுமின்றி வெறும் 1,000 ரூபாயை மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு.

அமைச்சர் ஏ.வ.வேலு அபத்தமான ஒரு கருத்தை சொல்கிறார். இப்படி பொய்களை மட்டும் சொல்லும் திமுக ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பாருங்கள். எல்லாம் மாறும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

  • Retro Pooja's black paint makeup looks bad.. Vijay film actress teases ரெட்ரோ பூஜாவுக்கு கருப்பு பெயிண்ட் மேக்கப் மோசம்.. பங்கமாய் கலாய்த்த விஜய் பட நடிகை!