வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தியது இவங்க தானா..? காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி.. ஆக்ஷனில் இறங்கிய போலீசார்!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 6:52 pm

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினம்-செகந்திராபாத் இடையேயான வந்தே பாரத் வெர்ஷன் 2 ரயில் போக்குவரத்தை இம்மாதம் 19ஆம் தேதி செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் வந்தே பாரத் வெர்ஷன் 2 அதிவேக ரயில் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. இடையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் ரயிலின் இரண்டு பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள விசாகப்பட்டினம் ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!