அஜித் ரசிகர் தூக்குபோட்டு தற்கொலை… துணிவு படம் பார்க்க சென்ற போது நடந்த நிகழ்வால் விரக்தி : போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 6:19 pm

தூத்துக்குடியில் அஜித் ரசிகர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் வீரபாகு(45). ஆட்டோ டிரைவரான இவர் தீவிர அஜித் ரசிகர். நேற்று முன் தினம் தனது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு துணிவு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பவுன்சர்கள் அவரை மட்டும் தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அவருடன் வந்த குடும்பத்தினரை மட்டும் படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீரபாகு அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் துணிவு படம் பார்க்க வந்தவரை பவுன்சர்கள் உள்ளே அனுமதிக்காததால் மனமுடைந்த அஜித் ரசிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…