டிக்டாக் புகழ் டான்சர் ரமேஷ் மரணத்தில் பரபரப்பு திருப்பம்… ஸ்டேஷனுக்கு வந்த கொலை புகார்?

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 2:02 pm

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு பின்புறம் மூர் மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தவர்தான் ரமேஷ். தன் நடனத் திறமையை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக வெளிப்படுத்தி அவர் டான்ஸர் ரமேஷாக புகழ் பெற்றார்.

பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சி, சினிமா வாய்ப்பு என குவியத் தொடங்கியது. சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

அதே போல திரைக்கு வர இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் படத்திலும் ரமேஷ் நடித்திருக்கிறார். திறமை மூலமாக தற்போதுதான் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் ரமேஷின் தனிப்பட்ட வாழ்க்கை அமைதியாக இருந்ததில்லை.

ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சித்ரா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்த அவர், பிரபலமான பிறகு, இரு மனைவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் கேபி பார்க் பகுதியில் இரண்டாவது மனைவியான இன்பவள்ளியுடம் வசித்து வந்துள்ளார். நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது நண்பர்களுக்கு விருந்து வைக்க, தனது 2வது மனைவியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்பவள்ளி பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த ரமேஷ், யாரும் எதிர்பார்க்காத வேளையில் வீட்டின் 10வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் பலியானதாக கூறப்படுகிறது.

இரண்டாவது மனைவி தரலப்பில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் முதல் மனைவி தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளதால், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிந்துள்ளதால் ரமேஷ் மரணத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

  • mansoor ali khan directing a full movie in sanskrit language மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?