இதுக்கு பேருதான் துணிவா..? திடீரென காயம்… ஒரு கையில் பேட் செய்த ஹனுமா விஹாரி.. வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 9:46 pm

நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆந்திரா – மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆந்திரா 379 ரன்கள் குவித்துள்ளது. விஹாரி, பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது.

அவர் வலியை பொறுத்துக் கொண்டு பேட் செய்ய முயன்றார். இருந்தும் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த போது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு உறுதி செய்திருந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது விஹாரி பேட் செய்ய வந்தார்.

வழக்கமாக அவர் வலது கையால் பேட் செய்வார். ஆனால், காயம் காரணமாக அவர் இடது கையால் பேட் செய்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டை பிடித்தபடி விளையாடி இருந்தார். அந்த நிலையிலும் ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி விளாசி அசத்தி இருந்தார். பின்னர், 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த அவர், சர்நேஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீள எப்படியும் 5 முதல் 6 வார காலம் வரை தேவை என ஆந்திர அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…